குடியாத்தம், பிப். 22– 15.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு குடியாத்தம் பெரும்படி கிராமத்தில் வெகு சிறப்பான குடும்ப விழா நடைபெற்றது.
இந்த குடும்ப விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் கலை மணி தலைமை தாங்கினார்.வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ரம்யா இந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
வந்திருந்த கொள்கை உறவுகள் குடும்ப உறவுகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விழா தொடங்கியது. அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கும் மகளிருக்கும் சிறுவர்களுக்கும் தனித்தனியே நடந்தது.
எல்லோரும் கலந்துகொள்ளக் கூடிய விளையாட்டுகளாகவும் இருந்தது. பின்னர் மதியம் சுவையான உணவு விருந்திற்கு பிறகு மீண் டும் போட்டிகள் நடை பெற்றது. அனைத்து போட் டிகளிலும் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்தக் குடும்ப விழாவில் சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற் றனர் என்பது சிறப்புக் குரியது.
இந்த நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தவர் மாநில மகளிரணி துணைச்செயலாளர் தேன்மொழி இறுதியில் வேலூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் ராஜகுமாரி வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். ச.ஈஸ்வரி, இரா. க. அறிவு சுடர், மோ.சாந்தி, தி.அனிதா, அ.ஜெ. ஓவியா, ஷோபனா, சி.லதா, விமலா, லஷ்மி ராஜஸ்வரி, பொன்மொழி, வி.சடகோபன், வி.இ.சிவக்குமார், இர.அன்பரசன், வி.வினாயக மூர்த்தி, சி.சாந்தகுமார், அறிவர சன், கு.இளங்கோவன், நெ.கி.சுப்பிரமணியன் ந.சந்திர சேகரன், அ. மொ.வீரமணி, தமிழ்ச்செல்வன், தமிழ்தரணி, யுவன், பாண்டியன், சுப்புராஜ், பெரியார்செல்வம், பாண்டியன், எழிலரசன், சென்னையில் இருந்து இசையின்பன், பசும் பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், செல்வி, மாலதி, உத்ரா, நூர்ஜஹான், பழனிச்சாமி, கீதா, தாமோதரன் மற்றும் 60 தோழர்களுக்குமேல் கலந்து கொண்டனர்.
