வரலாறு படைத்த தஞ்சை மாநாடுகள்…..

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

ஆ.இராசா

 

திராவிடர் கழகம்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

திராவிடர் கழகம்

ஆர். வைத்திலிங்கம்

திராவிடர் கழகம்

குத்தாலம் பி.கல்யாணம்

திராவிடர் கழகம்

துரை.சந்திரசேகரன்

திராவிடர் கழகம்

சண். இராமநாதன்

திராவிடர் கழகம்

ச.முரசொலி

திராவிடர் கழகம்

மருத்துவர் அஞ்சுகம் பூபதி

 

காவிரி வெள்ளம் கரை உடைத்ததோ என்று காண்போர் வியக்கும் அளவுக்கு கருப்பு உடைதரித்தோரால் தஞ்சைத் தரணி நிரம்பி வழிந்தது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு குறுகிய காலத்தில் 15 நாட்களில் தஞ்சையில் மாபெரும் மாநில மாநாடுகள்  பிப்ரவரி 21,ல் நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

அறிவித்தது நம் தலைவர் அல்லவா? அதுவும் 21.02.2026 முற்பகல் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநாடுகளும், மாலை திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடுகளும் நடைபெற்றன.

மாநாட்டின் வெற்றிக்கு கழகத்தின் அனைத்து அணி கண்மணிகளும், தஞ்சை, குடந்தை, பட்டுக்கோட்டை, மன்னை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர்  ஆகிய மாவட்டக் கழகத் தோழர்கள் பம்பரம் போல சுழன்று பணியாற்றினார்கள்.

21.2.2026 சனியன்று காலையில் 9 மணியளவில் பேறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் மாநாடும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு திராவிடர் இன எழுச்சிப் பேரணியும், காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஒவ்வொரு அணியும் பேரணியில் அணிவகுத்தனர். குறிப்பாக குழந்தைகள் தொடங்கி குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் வரை அனைவரும் திரண்டு சாதனை படைத்தனர்.

காலை 9 மணி  முதல் இரவு 9.15 மணி வரை இவ்வளவு கருஞ்சட்டை கூடி இருந்தாலும் எள் அளவு குறையும் இல்லாமல் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அனைத்திலும் கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தனர்.

திராவிடர் கழகத்தினுடைய தனித்தன்மை அதுவும் மகளிரணி-மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் என்பவர்கள் தனித்தன்மையோடு இருக்கிறார்கள். இராணுவ வீரர்களை விட ஒரு படி மேல் உயர்ந்தவர்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டில் கழகத்தின் இலட்சியக் கொடியை பலத்த ஒலி முழக்கங்களுக்கிடையே குழந்தை தெரசா ஏற்றி வைத்தார். இளைஞணி, மாணவர் கழக மாநாட்டில் கழகத்தின் இலட்சியக் கொடியை பலத்த ஒலி முழக்கங்களுக்கிடையே வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஏற்றி வைத்தார். இளைஞரணி சார்பில் இரா.வெற்றிக்குமார், மாணவர் கழகம் சார்பில் செந்தூர்பாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம் ஏன் மாநாடுகளை தொடர்ந்து நடத்துகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். பதவி பவுசுகளை விரும்பாத ஓர் இயக்கம் திராவிடர் கழகம். ஆனால் கழக மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட வடிவமாகி வரலாறு படைத்து கொண்டே தான் இருக்கிறது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழக மாநாடுகளில் தந்தை பெரியாரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிர்காலத்தில் அரசுகளால் சட்டமாக்கப்பட்டுள்ளன.

மாலை மாநாடு சரியாக 5.45 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளியும், வழக்குரைஞருமான மானமிகு முத்து சித்தார்த்தன் நினைவு அரங்கத்தில் திராவிடம் வெல்லும் இன எழுச்சி பாடல்களுடன் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், உரத்தநாடு டாக்டர் கயல் கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

மாநாட்டில் திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வரவேற்புரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

திராவிடர் கழகத்தின் லட்சியக் கொடியேற்றி, திராவிடர் கழக இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் கொடி வரலாற்றினை எடுத்துரைத்து உரையாற்றினார்.

மாநாட்டினை திறந்து வைத்து திராவிடர் கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாகை நாத்திகப் பொன்முடி உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, மாநாட்டின் தலைமையுரையை திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர்  இரா.செந்தூரபாண்டியன் ஆற்றினார்.

மாநாட்டு நிகழ்விற்கு தஞ்சை மாவட்டக் காப்பாளர்  மு.அய்யனார்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தா.தம்பி பிரபாகரன், எ.சிற்றரசு, மு.அருண்குமார், மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர்கள் இரா.ராகுலன், சீ.தேவராஜபாண்டியன், சு.ச.திராவிடச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மாநாட்டின் முத்தாய்ப்பான தீர்மான அரங்கத்திற்கு திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமை வகித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிதலை திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர்  ஒருங் கிணைத்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த 9 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன கடைசி சிறப்புத் தீர்மானத்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிந்தார்

மாநாட்டின் நோக்கத்தைப் பாராட்டி வாழ்த்தி தஞ்சை மாநகராட்சி  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் (திமுக), மாநகரச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான சண்.இராமநாதன், மேனாள் அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், தி.மு.க.உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர்  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.மு.க. உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர் குததாலம் பி.கல்யாணம், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

மாநாட்டின் சிறப்புரையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்  ஆ.இராசா எம்.பி., உரையாற்றுகையில், சமூகநீதியின் அடிப்படையையே குழிதோண்டி புதைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் தொடர்ந்து ஒன்றிய பாசிச பா.ஜ.க.அரசு -ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங் களுக்கு துணைப் போகும் சக்தியை தோலுரித்துக் காட்டினார்.

மாநாட்டின் நிறைவுப் பேருரையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடக்கும் போராக வருகின்ற சட்டமன்ற தேர்தல் இருப்பதால், ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும் மதச்சார் பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் வரலாற்று வெற்றியை இந்த கூட்டணி அடைந்தே தீரும் என்றும், மாநாட்டிற்கு வருகை தந்து பெருமை சேர்த்த அனைத்து அணி பொறுப்பாளர்களுக்கும், தோழர் களுக்கும் பாராட்டைத் தெரிவித்து மிகுந்த பாதுகாப்புடன் தோழர்கள் இல்லம் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் இணைப்புரை வழங்கினார்.

மாநாட்டினை சரியாக இரவு 9.10 மணிக்கு முடிந்தது.  நன்றியுரையை தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் கூறி நிறைவு செய்தார்.

திராவிடர் கழகம்

மாநாட்டில் மதுரை முனியசாமி தனது இல்லத்திறப்பின் போது பொது மக்களால் வழங்கப்பட்ட நிதியை பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினார். வழக்குரைஞர் சி.அமர்சிங்கின் பெயரன்கள்
இந்திரஜித், அன்புச்செழியன் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தேனி மாவட்ட தோழர்களின் சார்பில் ஏலக்காய் மாலையை சுருளி தமிழர் தலைவருக்கு அணிவித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *