தஞ்சாவூரில் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலையில் நடைபெற்ற, திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் 9 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வரங்கத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள்.
முதலாம் தீர்மானத்தை வேலூர் கலைமணி, இரண்டாம் தீர்மானத்தை காஞ்சிபுரம் ரேவதி, மூன்றாம் தீர்மானத்தை திருச்சி ரூபிகா, நான்காம் தீர்மானத்தை அரூர் கல்பனா, அய்ந்தாம் தீர்மானத்தை தஞ்சை அபிராமி, ஆறாம் தீர்மானத்தை கோபி வழக்குரைஞர் திலகவதி, ஏழாம் தீர்மானத்தை மதுரை நாகராணி, எட்டாம் தீர்மானத்தை சென்னை த.மரகதமணி, ஒன்பதாம் தீர்மானத்தை விருத்தாச்சலம் உஷா ஆகியோர் முன்மொழிய கூடியிருந்த மகளிர் அனைவரும் ஒருமித்து கையொலி செய்ததன் மூலம், வழிமொழிந்து திருமணங்களை நிறைவேற்றித் தந்தனர். இந்நிகழ்வை தோழர் மத்தூர் இந்திராகாந்தி ஒருங்கிணைத்து சிறப்பித்தார்..
