2026 சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைப்பு டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அறிவிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 22– வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வமான குழு அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை முதல் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியில் புதிய வரவுகளும், சவால்களும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியே தற்போதும் தொடர்கிறது. இருப்பினும், இந்த முறை கூட்டணியில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

புதிய கட்சிகள்

கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளன.

2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 234 இடங்களிலும் பின்வருமாறு போட்டியிட்டது:

கட்சி போட்டியிட்ட இடங்கள்

தி.மு.க. 173, காங்கிரஸ் 25, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஅய் தலா 6, அய்யுஎம்எல், கொமதேகதலா 3, மமக 2, தவாக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை தலா 1.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *