தமிழர் தலைவர் அறிவிப்பு!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து, மார்ச் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் சார்பில், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நேற்று (21.2.2026) தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பலத்த கரவொலிக்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்தார்.
