ஒன்றியஅரசின்சீருடைப்பணியாளர் தேர்வில் மாநில மொழிகள் புறக் கணிப்பைக் கண்டித்து தமிழ் நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. சிஆர்பிஎப் கணினித் தேர்வை தமிழிலும் நடத்த அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று (15.4.2023) ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப் படும் என அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஒன்றிய ஆயுத காவல் படை தேர்வை தமிழ் உள் ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்துவது என ஒன்றிய உள்துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது.