புதுக்கோட்டை, ஏப்.15- புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நேற்று (14.4.2023) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ச.குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா இரா.இராதாகிருஷ்ணன், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளருமான என்.கவுதமன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவ ருமான கே.நவாஸ்கனி, திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளர், ஒன்றியப்பெருந்தலைவர் மணமேல்குடி பரணி கார்த்திகேயன், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த புதுமடம் ஹலீம், மணமேல்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனியார் என்கிற அப்துல்லா, வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி, ஆவுடையார்கோயில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்.துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மாநில கிராமப் பிரச்சாரக் குழுச் செயலாளர் அதிரடி க.அன்பழகன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர், மாநில இளை ஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் க.முத்து, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், கழகப் பேச்சாளர் மாங்காடு மணி யரசன், புதுக்கோட்டை மண்டலச் செய லாளர் சு.தேன்மொழி, காரைக்குடி மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, சிவகங்கை மாவட் டத் தலைவர் கே.எம்.சிகாமணி, இராம நாதபுரம் மாவட்டத் தலைவர் எம்.முரு கேசன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், காரைக்குடி மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கோ.வை.அண்ணாரவி, பொதுக்குழு உறுப்பினர்கள் த.சவுந்தரராசன், மு.சேகர், மண்டல இளைஞரணிச் செய லாளர் க.வீரையா, மணமேல்குடி ஒன்றியத் தலைவர் ந.சிவசாமி, ஒன்றியச் செயலாளர் நாகூரான், மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.மகாராசா, அறந்தாங்கி ஒன்றியத் தலைவர் குழ.சந்திரகுமார், மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் அ.நாகூரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணமேல்குடி ஒன்றியச் செய லாளர் கரு.இராமநாதன், காங்கிரஸ் தெற்கு வட்டாரத் தலைவர் மன்னர் முகம்மது ஹனீபா, தமிழ்நாடு மீனவர் சங்கத் தலைவர் 102 பகுருதீன், திமுக கீழமஞ்சக்குடி ஒன்றியக் கவுன் சிலர் முத்துக்குமார், ஜெகதாப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அரபு மரைக்கா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலாளர் கதிர்வளவன், தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜுதீன், காங்கிரஸ் மீனவர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் வடுகநாதன்,
மீனவர் சங்க நிர்வாகிகள்
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் பாலமுருகன், கோட்டைப்பட்டினம் விசைப்படகு நலச்சங்கத் தலைவர் எம்.ஹசன்முகைதீன், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்துணைத் தலைவர் பி.மோகன், ஜெக தாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கப் பொருளாளர் செல்லத்துரை, பொறுப்பாளர்கள் செல்வம் செட்டி, கே.தேசிங்கு, கே.மோகன், ஜெக தாப்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்லத்துரை, ஜெகதாப்பட்டினம் நாட்டுப்படகு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கலைஞானம், நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜெயபால், கோட்டைப்பட்டினம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் மொஹம்மது மைதீன், கோட்டைப்பட்டினம் மகளிர் மீனவர் சங்கத் தலைவர் விக்டோரியா, புதுக்குடி கடல் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் சுதாகர், ஜெகதாப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் செல்வக்குமார், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு இந்நாள் தலைவர் உத்திராபதி, துணைத் தலைவர் மருது, பொருளாளர் செல்வம், கணக்கர்கள் செந்தில், மணிகண்டன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தமிழர் தலைவர் இந்த மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டை முன்னெடுத்து குரல் கொடுத்தமைகாக நன்றி தெரிவித்து பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர். அதற்காக பயனாடைகள் அணிவித்தும், புத்தகங்கள் பரிசளித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மாநாட்டுக்கு முன்னதாக ஜெகதாப்பட்டினத்தில் இயங்கி வரும் பகுத்தறிவு மளிகை அமைந்திருக்கும் இடத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தும், கல்வெட்டினைத் திறந்து வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அதே போல் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீனவர் சங்கக் கட்டடத்திற்குச் சென்று அங்கு ஏற்கெ னவே இலங்கைக் கடற்படையால் பதிக்கப் பட்ட வர்களின் குடும்பத்தினரையும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர் களது கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டார். மாநாட்டின் நிறைவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் யோவான்குமார் நன்றி கூறினார்.