பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கோயம்புத்தூர் அனுக்கிரகா வால்வ் தொழிற்சாலை நடத்திய வளாக நேர்காணல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், பிப். 21- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை அனுக்கிரகா வால்வ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கலந்து கொண்ட வளாக நேர்காணல் 10.02.2026 அன்று இக்கல்லூரியில் நடை பெற்றது.

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கி வரும் தொழிலக பயிலக இணைப்புத்திட்டத்தின் (Industry Institute Interaction cell) கீழ் சிறப்பாக செயல்படும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (Placement & Training Cell) வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் வளமான எதிர்காலத்தையும் பெருக்கி வளாக நேர்காணல் மூலம் மாணவ மாணவிகளின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடிற்கு காரணமாக இப் பாலிடெக்னிக் கல்லூரி விளங்கு கிறது என்றால் அது மிகையல்ல.

கடந்த ஆண்டு (2024 – 2025) சென்னை-ராயல் என்பீல்ட், பாண்டிச்சேரி-லூகாஸ் டி.வி.எஸ்., சென்னை-சுந்தரம் கிளேட் டன், சென்னை-நோக்கியா சொல்யூஷன்ஸ், ஓசூர்- டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, சென்னை-அப்பல்லோ டயர்ஸ், ஆந்திரபிரதேசம்-டைக்கிசன் ஏர் கண்டிஷண்ட் ஆகிய நிறுவ னங்கள் கலந்து கொண்டு 200 மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.

இந்த வருடம் (2025 – 2026) புகழ் வாய்ந்த தொழிற்சாலைகள் பங்குகொண்டு வளாக நேர்காணல் நடத்தி வருகின்றன. 10.02.2026 அன்று நடைபெற்ற வளாக நேர்காணலில் (Campus Interview)   கோயம்புத்தூர், “அனுக்கிரகா வால்வ் பிரைவேட் லிமிடெட்” (Anugraha Valve Private Ltd, Coimbatore ) என்ற நிறுவனம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் சுமார் 25 மாணவர்களை தேர்வு செய்துள்ளது.  இதற்கு முன் 23.12.2025இல் கோயம்புத்தூர்- ரெட்டினியூ அய்டி சொல்யூ ஷன்ஸ், (Retinue IT Solutions,  Coimbatore) 28.01.2026ஆம் நாளில் சென்னை-டிவிஸ் சுந்தரம் கிளேட்டன் (TVS Sundaram Clayton , Chennai) 29.01.2026  அன்று சென்னை – ராயல் என்பீல்டு (Royal Enfield, Chennai) 30.01.2026 சென்னை – வின்ட் வேர்ல்டு இந்தியா லிமிடெட் (Wind World India, Chennai), 06.02.2026 அன்று சென்னை – நோக்கியா சொல் யூஷன்ஸ் லிமிடெட் (Nokia Solutions  லிமிடெட், சென்னை) ஆகிய  நிறுவனங்கள் வளாக நேர்காணல் வாயிலாக 150 டிப்ளமோ மாணவ, மாணவிகள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

10.02.2026 அன்று நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்து பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவ மாணவிகளை இக்கல்லூரி முதல்வர் க.ப. வெள்ளியங்கிரி,  துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன் மையர் கோ.இராஜாராமன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *