பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சமுதாய வானொலி 90.4இல் உலக வானொலி நாள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், பிப். 21- பெரியார் சமுதாய வானொலி 90.4 சார்பாக, “வானொலியும் செயற்கை நுண்ணறிவும்” என்ற தலைப்பில் உலக வானொலி நாள்-2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறு வனத்தின் அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் துறை ஆசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையான உழைப்பு, தெளிவான நோக்கம் மற்றும் திறன் மேம்பாடு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

சமூகப்
பொறுப்புணர்வையும்…

மாணவர்களிடையே குறைந்து வரும் உரையாடல் மற்றும் எழுத்துத் திறன்களை மேம்படுத்திக் கொண்டால் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிதாகும் என குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் கல்வியுடன் சமூகப் பொறுப்புணர் வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதி மன்றம், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்களை புரிந்து கொண்டு சமூக நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பெண் கல்வி மற்றும்
வேலை வாய்ப்பு

ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் கடுமையான உழைப்பு உள்ளது; குறுக்கு வழியில் நிலையான வெற்றி சாத்தியமில்லை என்றும், வெற்றிக்கு வயது வரம்பில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெண்களுக்கு சுயமரியாதையையும் சமூக முன்னேற்றத்தையும் வழங்கும் என்றும் கூறினார்.

செயற்கை
நுண்ணறிவு காலம்

இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். வெ. இராமச்சந்திரன், இணைவேந்தர் முனைவர் ஆர். மல்லிகா, பதிவாளர் முனைவர்  பி. கே. சிறீவித்யா, பெரியார் வானொலி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ராதிகா மைக்கேல் மற்றும் முனைவர். ராம் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டு, வானொலி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு காலம் வரை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் சமூகப் பயன்கள் குறித்து கருத்துரைத்தனர். வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக் கப்பட்டது .

பெரியார் வானொலி நிலைய இயக்குநர் முனைவர்  ச. நர்மதா வரவேற்புரை நிகழ்த்தினார். இரண்டாம் ஆண்டு இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவி கே. முத்தரசி நன்றியுரை வழங்கினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *