ஜெயங்கொண்டம். பிப். 21- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாணவர் கள் பொதுத்தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள உதவுவதற்காக பள்ளியின் தாளாளரது வழிகாட்டலுடன் முதல்வர் இரா. கீதாவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி. கிருஷ்ண குமார், டாக்டர் நட ராஜன், டாக்டர் திலீப் ஜோஸ், டாக்டர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங் கினார்கள்.
தேர்வுக்கான திட்ட மிடல், நேர மேலாண்மை, மனஅழுத்தத்தை கட்டுப் படுத்தும் முறைகள், முக்கிய பாடங்களில் கவனம் செலுத்த வேண் டிய பகுதிகள் ஆகியவை குறித்து விரிவாக விளக் கினார்கள்.
மேலும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரி வித்தனர்.
இந்நிகழ்ச்சி மாணவர் களுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
