வல்லம், பிப். 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், கோயம்புத்தூர், ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப கட்டுரை வாசித்தலில் (Technical Paper Presentation) இயந்திரவியல் துறை மாணவர்கள் செல்வன் எஸ்.டி.ஹரிஹரன், எஸ்.ஹரிஸ் “Precision Agriculture in Mechanical Systems” என்ற தலைப்பில் இரண்டாம் பரிசும், மின்னணுவியல் மற் றும் தொடர்பியல் துறை மாணவர்கள் செல்வன் என்.ஹரிபிரசாத், எஸ்.அரவிந்த் “AI in Electronics Devices” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியின் சார்பாக இயந்திரவியல் துறை பேராசிரியர் ஜெ. கணேசன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாணவர்களுக்குப் பாராட்டு
பாராட்டுச் சான்றி தழ்களும் மற்றும் ரொக்கப் பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டினார்கள்.
