பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான்.
பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி. பருப்பு. காய்கறி. செருப்பு அனுப்புவான்.
ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும். மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான்.
ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும், பட்டமுமே போதுமானதாகிவிடாது!
– அறிவாசான் தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ – 19.12.1937)
