அறிவு வேறு! – படிப்பு வேறு! அன்றே சொன்னார் தந்தை பெரியார்!-புதூரான்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘அவதார’ நாடகமா?

தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் பகுத்தறிவும் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் நடக்கும் நிகழ்வு  மூடநம்பிக்கைகளை இன்னும் “ஆக்கப்பூர்வமாக” விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

ஹோவர்போர்டு – ‘ஊர்ந்து வரும்’ ஆதிசேஷன்!

நின்றுகொண்டு செல்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹோவர்போர்டு (Hoverboard) கருவியில்,சாமியார் படுத்துக்கொண்டு ஊர்ந்து வருவதைப் பார்க்கும்போது வியப்பை விட வேதனையே மிஞ்சுகிறது.

பாம்பின் உடல் போன்ற பொம்மையை முதுகில் கட்டிக்கொண்டு, அந்த இயந்திரத்தின் உதவியால் நகர்ந்து வருகிறார் அவர்  “ஆதிசேஷனின் அவதாரமாம்!

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஒரு கருவியை, ஆன்மிக சக்தியால் நடக்கும் அற்புதம் போல சித்தரிப்பது அறிவியலுக்கு விடப்பட்ட சவாலாம்!

அமாவாசையும். ‘ஸ்பெஷல்’ கட்டணமும்!

இயற்கையான வானியல் நிகழ்வுகளான அமாவாசை மற்றும் முழு நிலவு நாளில் இந்த ஆதிசேசனை தரிசிக்க சிறப்புக் கட்டணம்  உண்டாம்!

கூட்டம் கூடிய பிறகு  மணி ஓசைக்குப் பின் அறையிலிருந்து வெளிப்படுவது ஆதிசேசன் வெளியேவந்து மூன்று முறை கோவில் வளாகத்தை படுத்துக்கொண்டே சுற்றி வருகிறார்,

பின்னர் அவர் உள்ளே சென்று விடுகிறார். முதலில் வந்த கூட்டம் சென்ற பிறகு அடுத்த கூட்டம் மீண்டும் ஆதிசேசனை தரிசிக்க கூடுகிறது.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட ஆன்லைனில் முன்பதிவு செய்து நேரலையில் (Live Stream) தரிசனம் செய்கிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட அவலம்.

அங்கு நிற்கும் நபர்கள் அனைவரும் உயர் கல்வி மற்றும்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மெத்தப் படித்த மேதாவிகள்

போலித்தனங்களை நம்புவது, கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்பிற்காக மட்டுமே, அது சிந்தனைத் தெளிவிற்கானது அல்ல என்பதை உணர்த்துகிறது.

ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) பற்றிப் பேசும் அதே காலக்கட்டத்தில், மறுபுறம் ஹோவர்போர்டு பாம்புகளைப் புனிதமாகப் பார்க்கும் முரண்பாடு இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

இதுபோன்ற “ஹோவர்போர்டு சாமியார்கள்” சமூகத்தில் உள்ள நம்பிக்கையை மூலதனமாக வைத்துகொண்டு கேலிக்கூத்தாக மாற்றி வருகிறார்கள்.  மக்கள் தாங்கள் எதைப் பார்க்கிறோம், எதற்காகப் பணம் செலுத்துகிறோம் என்பதைச் சிந்திக்கும் வரை, இதுபோன்ற நவீன காலத்து வேடிக்கை மனிதர்கள் பெருகிக்கொண்டேதான் இருப்பார்கள்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *