தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள் என்பது பற்றி யோசனை செய்து முடிவெடுக்காது, மணலைக் கயிறாய்த் திரிப்போம், வானத்தை வில்லாய் வளைப்போமென்றுப் புளுகி வாக்குறுதிகளை வாரி வழங்குவோரிடம் உசாராக இல்லாது, ஏமாந்து அந்த ஓட்டு வேட்டைக்காரர்களுக்கு வாக்களிக்கும் மடமை மாய்க்கப்படுவது எப்போது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
