தேக்கம்பட்டி, பிப். 20- பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநில மாநாட் டிற்கு மேட்டுப்பாளையம் (கழக) மாவட் டத்திலிருந்து தனி பேருந்தில் வருகைப் புரிந்து பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என மேட்டுப்பாளையம் (கழக) மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
15.02.2026 அன்று மாலை 4 மணியளவில் குட்டைப்புதூர் தேக்கம்பட்டியில் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில இளைஞரணிச் செய லாளர் சி.பி.க.நாத்திக.பொன்முடி, தலைமை வகித்து கூட்டத்தின் நோக் கங்களையும், இருபெரும் மாநில மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர் பயணங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.பிரபா கரன், மாவட்ட மகளி ரணித் தலைவர். இரா.நாகமணி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாவட்ட தலைவர் சு.வேலுச் சாமி, மாவட்ட செயலாளர் இரா.அரங்கசாமி, ஆகியோர் கருத்துரையாற்றினர்
மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.வீரமணி நிகழ்வினை ஒருங்கிணைத்து தொடக்க வுரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் இரா.அன்புமதி, சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் வே.சுந்திரன் மாவட்டத் துணைச் செயலா ளர் நாராயணன் மேட்டூர் முருகேசன், விக்னேஷ், தியாகராசன், கிருஷ்ணன், ராஜலட்சுமி, முத்துசாமி, திராவிட மணி, மேட்டுப்பாளையம் ரங்கசாமி, விக்னேஷ். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிப்ரவரி – 21 இல் தஞ்சாவூரில் நடை பெறவிருக்கும் இரு பெரும் மாநில மாநாட்டிற்கு மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
மாவட்ட இளஞரணி தலைவர் நா.பிரதீப் நன்றி கூறினார்.
