மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு காட்டும் பரிவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கந்தர்வகோட்டை, பிப்.20 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்

தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான சொல்வதை எழுதுபவர்களாக (scribe) தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி ஆசிரியர்களை தேர்வு எழுத அனுமதித்த தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் மாற்றுத்திறனாளி என்ற துறை உருவாக்கப்பட்டு பல்வேறு வகையான உரிமைகளை உரிமையோடு வழங்கினார். கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளி துறையின் அமைச்சராக இருந்து பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறார்.  மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு இருமடங்கு கல்வி உதவித்தொகை உயர்வு, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் கல்வி உதவித்தொகை, இந்தியாவிலேயே முதன்முறையாக திராவிட மாடல் ஆட்சியில்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பொறுப் பேற்றுள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களை தாங்களே பராமரித்திட இயலாத மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் அரசு 2021-2022 ஆம் ஆண்டில் 814 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதிலிருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் 1,433 கோடி ரூபாயாக உயர்த்தி பல்வேறு சலுகைகளை உரிமையாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உரிமை வேண்டுகோளாக முற்றிலும் வீட்டிலே தங்கிப் பயிலக்கூடிய பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்களித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என உரிமையோடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *