தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை அமைச்சர் கே.என். நேரு குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.20  ‘தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான பங்கு ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கூட்டு குடிநீர் திட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பென்னா கரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேசியதாவது: பென்னாகரம் தொகுதி நிலத்தடி நீர் புளோரைடு நச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. ஆனால், மாவட்டங்களின் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறவில்லை.நான் வைத்த கோரிக்கை அடிப்படையில், ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.9 ஆயிரம் கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஜனவரியிலேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ரூ.2,900 கோடியில் குடிநீர்திட்டத்தை, ஜப்பான் வங்கி நிதிஉதவி பெற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அந்நிறுவனமும் ஒப்புதல் கொடுத்துள்ளது. அவர்கள் விரைவில் பார்வையிட உள்ளனர்.

ரூ.3200 கோடி நிறுத்தி வைப்பு

இதற்கிடையே ஜல்ஜீவன் திட் டத்தில் ஒன்றிய அரசு தர வேண்டிய பங்குத் தொகையைவழங்கவில்லை. அந்த வகையில், 18 குடிநீர் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்குத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசு தர வேண்டிய பங்குத் தொகை ரூ.3,200 கோடி. அதையும் நிறுத்திவைத்து விட்டனர். மத்திய அரசின்நிதி வராததால், கடன் தரும் நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ளன. 18 திட்டங்களுக்குத் தேவையான ரூ.5,500 கோடி நிதியை தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தை நிறுத்தி விட்டது.

அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று அறிக்கை கொடுத்துவிட்டனர். இருப்பினும் நிதி வருவது தாமத மாகிறது. ஒன்றிய அரசின் நிதி வந்த வுடன் பென்னாகரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *