தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன்பெறுகின்றனர் சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.20 தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன் பெறுகின்றனர் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அமைச் சர் மா. சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் அவர்கள் தாம்பரம் வட்டார மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தி ரூ.115 கோடியில் பிரமாண்டமான கட்டடத்தை மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் நேரடியாக திறந்து வைத்து, இன்றைக்கு நாள்தோறும் 2,500 புற மருத்துவ பயனாளிகள் பயன்படுத்தக்கூடிய மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்றைக்கு கூட ரூ.30.16 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் முதன்முறையாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சிகிச்சை மய்யம் ஒன்று நேற்று (19.2.2026) தொடங்கி வைக்கப்பட்டது. புற்றுநோய் இறுதி சிகிச்சைக்கான ஆதரவு மய்யம் என்பது இந்தியாவில் முதன்முறையாக தாம்பரம் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஒட்டி, திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு வசதிகள் தாம்பரத்திற்கு குறுகிய கால இடைவெளியில் ரூ.145 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.  உறுப்பினர் கூறியிருப்பதைப் போல எம்.ஆர்.அய். ஸ்கேன் ஒன்று வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிச்சயம் அதை அமைத்துத் தருவதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த மருத்துவமனையைப் தேவையான மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கிறார்கள். ஒரு காலிப்பணியிடம் கூட இல்லை.

மேலும் மொடக்குறிச்சி, விளவங்கோடு, மானாமதுரை, மேட்டூர், கள்ளக்குறிச்சி, வந்தவாசி, போளூர், திருவாரூர், உசிலம்பட்டி, ஆரணி, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *