காசாவில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

Viduthalai
2 Min Read

அரசியல்

நியூயார்க், நவ.6- இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் படுகாய மடைந்த  பாலஸ் தீனர்களை  ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது   இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 நபர்களை படுகொலை செய்ததற்கு அய்.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.   

இஸ்ரே லின் வான் வெளி தாக்குத லில் படுகாய மடைந்த நபர் களை ரஃபா எல்லை வழி யாக எகிப்து மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்த போது அந்த ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி 15 அப்பாவிகளை படுகொலை செய்தது. இதற்கு அய்.நா. பொதுச் செயலாளர் உட்பட  பாலஸ் தீன ரெட் கிரசென்ட் சொசைட்டி, காசா சுகாதார அமைச்சகம், அல்-ஷிஃபா மருத்துவ மனையின் இயக்குநர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

இந்த தாக்குதலை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அந்த ஆம்புலன்ஸில்  ஹமாஸ் குழுவினர் இருந்ததாக பொய் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது. வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது நடத்தும் தாக்குதல் களுக்கும் இதே காரணத்தை இஸ்ரேல் ராணுவம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் குறித்து அய்.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ், எக்ஸ் சமூக ஊடகப்பதிவில்,

 “காசாவில் ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்” என்றும், “கிட்டத்தட்ட ஒரு மாதமாக, காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப் படுகின்றனர். வீடுகள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கான உதவிகள் மறுக்கப்பட்டு வருகின் றன. இது நிறுத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். 

அல்-ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரியும் எல்லை களற்ற மருத்துவ தொண்டு நிறுவனத்தின் (விஷிதி) மருத்துவர் களில் ஒருவர், “நாங்கள் மருத்துவ மனை வாயிலில் நின்று கொண்டிருந்தோம், அப்போது ஆம்புலன்ஸ் நேரடியாக எங்கள் முன் மோதியது. எங்கும் இரத்தம் தோய்ந்த உடல்கள் இருந்தன. சிறுவர்களின் கைகளும் கால்களும் உடைந்து உடல்கள் சிதறிக் கிடந்தன” என்று இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலின் கொடூரத்தை விவரித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *