தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் (அவசரநிலைக் காலம்) புலவர் கோவிந்தன் அவர்களின் முதல் மகன், பேராசிரியர் முனைவர் கோ.திருமாவளவன் அவர்கள், பெயர்பெற்ற வரலாற் றாளர். அவர் இன்று (19.02.2026) அதிகாலை உறக்கத்திலேயே உயிர் துறந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக இருந்த சில நேரங்களில் அவரை நேரில் சந்தித்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
