அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் 14,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டங்கள் ரூபாய் 77 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப் படும் என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின் சாரத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. அப்போது கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய இத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை யானது இம்மாதம் 6ஆம் தேதி உச்ச பட்சமாக 18,252 மெகா வாட்டாக பதிவானது. இது கடந்த மாதத்தில் பதிவான உச்சபட்ச மின் தேவையை காட்டிலும் 1771 மெகாவாட் கூடுத லாகும். தற்போது தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு சராசரியாக சுமார் 360 மில்லியன் யூனிட் அளவாக உள்ளது இதுவும் 388.078 மில்லி யன் யூனிட்டாக அதிகரித்திருக் கிறது. இது மே மாதத்தில் மேலும் அதிகரித்து 395 மில்லி யன் யூனிட் வரை உயரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மொத்த காற்றாலைகளின் நிறுவு திறன் 10,67.20 மெகாவாட் ஆகும். சூரிய சக்தி மின் உற்பத்தி நிலை யங்களின் மொத்த நிறுவு திறனில் இந்தியாவில் தமிழ்நாடு நான் காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், தமிழ் நாட்டின் மொத்த மின் நுகர்வில் 74 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது அதனை ஈடு செய்யும் வகையில் மின் தொடர் அமைப்பு மற்றும் மின் பகிர்மான கட்ட மைப்பை நவீனப் படுத்துவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் நிறுவு திறனை இரட்டிப்பாக்கும் வகையில் தமிழ் நாடு அரசு 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி யில் 20.88 விழுக் காடாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிடப் பட்டுள் ளது. குந்தாவில் தற்போது கட்டப் பட்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டம் 2024-25 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். மாநிலத்தில் 14,500 மெகா வாட் திறன் கொண்ட நீரேற்று புனல் மின் திட்டங்களை நிறுவுவ தற்கு 15 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இத்திட்டங்கள் உச்ச மின் தேவையை எதிர்கொள்ளவும் உதவும்.
மேலும், இந்த புனல் நீரேற்று மின் திட்டங்கள் ரூபாய் 77 ஆயிரம் கோடி செலவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல் படுத்தப்படும். இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.