சென்னை, பிப்.19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி – தாம்பரம் வளாகம் கீழ் செயல்படும் ரூ.30.15 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தினை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் சீ.பாலசந்தர், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மதிப்பிற்குரிய துணை மேயர் ஜி.காமராஜ், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சாந்தாராமன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.
