டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்: செயல்பட விடாமல் ஒன்றிய அரசு நெருக்கடி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* அதானி குழுமத்தில் பங்குகளை குவிக்க பினாமி நிதி அதானி குழும மோசடிகள் பற்றிய ஜேபிசி விசாரணையை மோடி தடுத்து விட்டார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஏஅய் தாக்க மாநாட்டில் கடும் சர்ச்சை: சீன ரோபோ நாயை காட்சிக்கு வைத்த உபி கல்கோடியா பல்கலைக்கழகம்: அரங்கிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவு; கண்காட்சிக்கு இன்று பொதுமக்கள் வர திடீர் தடை.
*முறைப்படுத்தாத ஒரு ஏஅய் சம்மிட் மாநாடு என ராகுல் குற்றச்சாட்டு.
* தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் உட்பட 37 எம்.பி.க்கள் பதவிக் காலம் முடிகிறது மார்ச் 16இல் மாநிலங்களவை தேர்தல்: பாமக, அமமுக சீட் கேட்பதால் அதிமுகவுக்கு சிக்கல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியா கூட்டணியின் தலைமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படும் போது மட்டும் விழித்தெழுந்து பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது. ஒன்றாக இணைந்து பேசி தெளிவான முடிவை எடுப்பதே புத்திசாலித்தனம், உத்தவ் சிவசேனா கட்சி சாம்னா தலையங்கம் வலியுறுத்தல்
தி இந்து:
* மகாராட்டிராவில் இசுலாமியருக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்தது பாஜக அரசு
தி டெலிகிராப்:
* லக்னோ பல்கலைக்கழக நிகழ்வின் போது மோகன் பகவத் வருகைக்கு தேசிய மாணவர் அமைப்பு (NSUI) எதிர்ப்பு. “இந்திய சமூகத்தில் வெறுப்பின் சின்னம்”, “பகவத் திரும்பிச் செல்லுங்கள்” மற்றும் “ஆர்எஸ்எஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டனர்
– குடந்தை கருணா
