கோபி, பிப். 19- கோபிச்செட்டிப் பாளையம் கழக சார்பில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லத்தில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 15.02.2026 நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் தொடக்க உரை ஆற்றினார். பெரியார் பெருந்தொண்டர் பெ. இராஜமாணிக்கம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ப. குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா.சூர்யா நன்றியுரை கூறினார்.
இக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் விஜயசங்கர், லட்சுமணன், செந்தில்குமார், கந்த சாமி, பழனிசாமி, மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் ப.திலகவதி, மகளிரணி பூங்கொடி, சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் நாகராஜ், கோபி ஒன்றிய செயலாளர் கே.எம். சிவக்குமார், மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் இரா.கார்த்திக், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.திவ்யா, மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் சி.மதிவதனி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் சி.அறிவுச்செல்வி, இளைஞரணித் தோழர்கள் சுரேஷ், பிரபாகரன், கார்த்திக், சதுமுகை பழனிசாமி பெரியார் பிஞ்சு பகுத்தறிவு, திராவிட புரட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள் .
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
எதிர்வரும் 21.02.2026 தஞ்சையில் நடைபெறும் மகளிரணி, இளைஞ ரணி, மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கோபி கழக மாவட்டத் தின் சார்பில் இரண்டு தனிப் பேருந்துகளில் பங்கேற்பதென முடிவு செய்யப்படுகிறது.
