அரூர், பிப். 19- தருமபுரி, அரூர் கழக மாவட்டங்களின் மகளிர் அணி, மகளிர் பாசறை இணைந்த கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் இன்று 16/2/26 மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு அரூர் கழக மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, தருமபுரி மாவட்ட மகளிர் அணி தலைவர் நளினியும் இணைந்த தலைமையேற்றனர்.
மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் பெ.கோகிலா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
அரூர் கழக மாவட்ட தலைவர் அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி கழக மாவட்ட செய லாளர் பீம தமிழ் பிரபாகரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, அரூர் கழக மகளிர் அணி செயலா ளர் பெ.உமா, அரூர் மகளிர் பாசறை தலைவர் பெ.கல்பனா, இளைஞர் அணி பிரபாகரன் ஆகி யோர் கருத்துக்களை தெரிவித்து உரையாற்றினர்.
நிறைவாக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை ஜெயராமன், தஞ்சை மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்த நோக்கங்கள் குறித்தும்,
குடும்பம் குடும்பமாக மகளிர் தோழர்கள் இளைஞர் அணி, மாணவர் கழகத் தோழர்கள் அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தும் அரூர் கழக மாவட்டத்தில் இருந்தும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினார்.
25க்கும் மேற்பட்ட மகளிர் தோழர்கள் தருமபுரி மாவட்டத்தின் சார்பாகவும், 30க்கும் மேற்பட்ட மகளிர் தோழர் கள் அரூர் கழக மாவட்டத்தின் சார்பாகவும் கலந்து கொள்வோம் என்று இரண்டு மாவட்டங்கள் சார்பாகவும் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஜெயராமன் ரூபாய் 1000 வாகனச் செலவிற்காக மகளிர் அணி, பாசறை தோழர்களுக்கு வழங்கினார்.
தருமபுரி மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் வாகனச் செலவிற்காக ரூபாய் 1000 மகளிர் அணி மகளிர் பாசறை தோழர் களுக்கு வழங்கினார்.
கலந்து கொண்ட தோழர்கள்
தொழிலாளர் அணி பொறுப் பாளர் ஊமை காந்தி, கி.அருணா, ரா.சுந்தரி, பெ.கல்பனா, சுமதி, மஞ்சு சேட்டு, சகிலா, உமா சேட்டு சிவாடி சங்கர், சின்னக்கண்ணு, விக்னேஷ், டெய்லர் நாசர் சேகர் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
21/2/2026 அன்று தஞ்சாவூரில் தமிழர் தலைவர் அறிவித்துள்ள திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை மாநாட்டிற்கு அனைத்து மாவட் டங்களிலிருந்தும் அதிக அளவில் மகளிர் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் ..
கழக மாவட்டங்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ கலந்துரையாடல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு மாநாட்டுக்கு செல்ல வேண் டியது பற்றி பேச வேண்டும்..
வாகன ஏற்பாடுகள் குறித்தும் முன்பதிவு செய்ய வேண்டிய பிரயாணங்கள் குறித்தும் பேச வேண்டும்
இயக்கம் பற்றி தெரியாத, புது மகளிரை மாநாட்டிற்கு நிறைய அழைத்து வர வேண்டும் ..
மாவட்ட வாரியாக பொறுப் பாளர்கள் முகவரிகளும் செல் பேசிகளும் பட்டியலிடப்பட வேண்டும் ..
மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக கிராமங்கள் தோறும் மற்றும் நகரங்களிலும் துண்டறிக்கை பிரச்சாரம் இந்த காலகட்டத்தில் அதிகம் நடத்தப் பட வேண்டும்..
தஞ்சாவூர் மகளிர் அணி பாசறை மாநாடு whatsapp குழுவை தொடர்ந்து மகளிர் தோழர்கள் கவனித்து வரவேண்டும் அவ்வப் போது செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது..
