கல்லக்குறிச்சி, பிப். 19- 14.2.2026அன்று காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை கல்லக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கழகக் குடும்பங்களை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கரன் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராசன், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோருடன் சென்று சந்தித்து மகிழ்ந்தோம்.
சந்தித்த ஊர்கள்
நயினார்பாளையம், உலகியநல்லூர், மேலூர், வடக்கநந்தல், மாத்தூர், எடுத்த வாய்நத்தம், பரிகம், கல்லக்குறிச்சி, சங்க ராபுரம், எஸ்.வி.பாளையம், ஊராங்கனி, சு.குளத்தூர், பாக்கம், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர், தேவரடியார்குப்பம்
அனைத்து ஊர்களிலும் இருந்து தஞ்சாவூரில் பிப்ரவரி-21இல் நடை பெறும் கழக மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழக, இளைஞரணி மாநாட்டிற்கு குடும்பத்தோடு பங்கேற்பது எனவும், மார்ச்-10 அன்று அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
