முதலீட்டில் மட்டும் முதலிடம் அல்ல சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை பாராட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 18 முதலீட்டில் மட்டும் அல்ல; சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை படைத்து உள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில பத்திரிகை பாராட்டி உள்ளது.

‘PRIVATE PUSH FOR TOURISM IN TN’ எனும் தலைப்பில் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

சுற்றுலாப் பயணிகளை தமிழ்நாடு அதிக அளவில் ஈர்த்து வருவதாகவும், இத்துறையை விரிவுபடுத்த அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு அண்மையில் தனியார் நிறுவனங் களுடன் ரூ.22 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டுள்ளதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், சாகசச் சுற்றுலா விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, சொகுசு விடுதிகள், ரிசார்ட்டுகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட உள்ள தும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

தூத்துக்குடியில் மின்வாகனங் களை உற்பத்தி செய்யும் ‘வின் குரூப்’ தமிழ்நாட்டில் பல இடங் களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டு களை அமைப்பதற்காக ஆய்வு செய்து வருவதால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும். இக்கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம் பாட்டு வாரியமும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மாமல்லபுரத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்ட க்ளோ கார்டன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் திறக் கப்பட்ட மிதக்கும் உணவகம் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பான உதாரணங்கள் என்றும் இக்கட்டுரை பாராட்டி உள்ளது.

தனியார் ஒத்துழைப்புடன் ஏலகிரி, ஜவ்வாது மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான டெண்டர் கோரும் நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பில் உள்ள சுமார் 6 பாரம்பரிய கட்டடங்களை அடையாளம் கண்டு பொதுப்பணித் துறையினர் அவற்றை பாரம்பரிய ஓட்டல்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டி உள்ள இக்கட்டுரை. கடந்த 2024ஆம் ஆண்டு 30 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தமிழ்நாடு. வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பான சாதனைகளை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *