மதக் கலவரத்தைத் தூண்ட மட்டரக செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் பகுதியில் உள்ள அனுமன் கோவிலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து சிலையை அசுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசம் மோடி தபேலா பகுதி, ராஜி பஜாரில் உள்ள அனுமன் கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்த மூவர், சிலைக்கு முன்பாக சிறுநீர் கழித்து, சிலையிலும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

காலையில் இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பினர் அங்குக்கூடி, இது இஸ்லாமியர்கள் செய்த செயல் எனக் கூறி, போராட்டங்களில் வழக்கம்போல ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

காவல்துறை அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த அருவருப்பான செயலில் ஈடுபட்டது மாற்று மதத்தினர் அல்ல, மாறாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

ராஜா துபே, கமல் அறிவார், அற்பித் சவுகன் ஆகியோர் அந்த மூவர். இதில் ராஜாதுபே மற்றும் கமல் அறிவார் இருவரும் பாப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

விசாரணையில், திட்டமிட்டு மதக்கலவரத்தைத் தூண்டுவதற்காகவே இவர்கள் இக் கேடு கெட்ட செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், இவர்கள் உலக ஹிந்து சமூகத்திடம் (?) மன்னிப்புக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இவர்களை விடுவித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. (16.2.2026)

பார்ப்பனர்கள் ‘பிறவிக் குற்றவாளிகள்’ என்பார் தந்தை பெரியார். சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இரண்டுப் பார்ப்பன நீதிபதிகள் முன்னிலையிலேயே ‘‘பிறவியில் குற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது. அது போன்றதே பார்ப்பனத் தன்மை’’ என்று  அன்று சொன்னது – உண்மையானது என்பது இன்றைக்கும் நம் கண் முன்னே யதார்த்தமாகத் தெரியவில்லையா?

மத்தியப் பிரதேசத்தில் நடந்த அநாகரிகமான, அருவருக்கத் தகவல் இந்த இழி செயல் எதைக் காட்டுகிறது?

ஒன்று கடவுளாவது, புண்ணாக்காவது! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை – கடவுள் என்பதே கற்பிக்கப்பட்ட ஒன்றுதான்.

இது பார்ப்பனர்களுக்கு நம்மைவிட மிக நன்றாகவே தெரியும். கோயில் கருவறையில் அன்றாடம் நெருக்கமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

அந்த அடிப்படையில் கோயிலுக்குள் சென்று அனுமன் முன்னிலையிலே – முக்கியமாக மூவரில், இரண்டு பார்ப்பனர்கள் சிறுநீர் கழித்து, ‘அனுமன்’ சிலை மீதும் அசிங்கம் செய்து இருக்கிறார்கள்!  கேட்பதற்கே சொல்லுவதற்கே அசிங்கமாக இருக்கவில்லையா?

‘கடவுள் என்ற ஒன்று இல்லை’, ‘கடவுள் சிலைகளுக்குச் சக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை’ என்பது பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதோடு அந்தப் பிரச்சினை முடியவில்லை.

(2006ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மச்சேஸ்வர் கோயில் கருவறையில் தேவநாதன் என்ற அர்ச்சகன் கோயிலுக்கு வரும் பெண்களிடம் காமலீலைகளைப் புரியவில்லையா?)

மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பனர்கள் செய்த இந்த அசிங்கத்தை மறைத்து, முஸ்லிம்கள்தான் அதைச் செய்தார்கள் என்று பரப்பி, இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் திட்டத்தை வைத்தே இதைச் செய்திருக்கிறார்கள் என்ற குட்டும் உடைந்து விட்டதே!

சி.சி.டி.வி. கேமரா காட்டிக் கொடுத்து விட்டது!

மதக் கலவரத்தைத் தூண்ட சங்பரிவார்களும், பார்ப்பனர்களும் எந்த அசிங்கத்தின் எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இதன்மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எப்படி எடுப்பார்கள்? மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க.வாயிற்றே!

உலக இந்து (யார் அந்த உலக இந்து சமூகம்?) சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டு விட்டார்களாம். அதனால் வழக்கெல்லாம் கிடையாதாம்! அதுவும் குற்றம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் ஆயிற்றே!  அதுதான் முக்கிய காரணமாகும்.

வட மாநிலங்களில் எத்தகைய மதவெறிக்கு அன்றாடம் சங்கிகள் கத்தித் தீட்டிக் கொண்டு அலைகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதியான சூழலும், மதச்சார்பின்மையும் உலவ வேண்டுமானால் முதலில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களையும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும் அடையாளம் தெரியாத அளவிற்கு, ஆணிவேர் இல்லாமல் தத்துவ ரீதியாக அழிக்க  வேண்டும். அரசியல் வேடமிட்டு, அதிகாரத்தில் பிஜேபி ஆளும் நிலை முற்றாக வெகு மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். மலத்தில் கால் வைத்து விட்டோமே என்று துடிக்க வேண்டும். ஆட்சி பலம், பண பலம், பத்திரிகைப் பலம் ஆகியவற்றின் துணை கொண்டு ஆட்டம் போடும் கும்பலின் நாசகார வன்முறைகளை ஒழிக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பலமாகப் போரிட வேண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *