150 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.18- இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப் படவுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில், 300 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளும், ரூ. 32 கோடியில் மகளிர் குழுக்களுக்கான கடனுத விகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மடிக்கணினி

தமிழ்நாட்டில் பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தில் பெண்கள் இதுவரை 960 கோடிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 கோடிப் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் மாதத்துக்கு ரூ. 900 முதல் ரூ. ஆயிரம் வரை பெண்கள் மிச்சப் படுத்துகின்றனர்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி யிருக்கிறோம்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க சிலர் முயற்சி செய்வதை அறிந்த முதலமைச்சர், 3 மாதப் பணத்துடன் கோடைக்காலத்துக்கு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரத்தை வழங்கி யிருக்கிறார்.

விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் சார்பில் 30 விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட கலைஞர் விளையாட்டுத் தொகுப்பை கிராமப்புற ஊராட்சிகளுக்கு வழங்கப் பட்டதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 300 தொகுப்புகள் வழங்கப் படுகின்றன.

150 பேருக்கு அரசு வேலை

பன்னாட்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருந்த நிலையை மாற்றி, பங்கேற்பவர்களாகவும் வெற்றி பெறும் வாய்ப்பை யும் முதலமைச்சர் ஏற்படுத்தி யிருக்கிறார். தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்போருக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெறுவோருக்கு அதிக ரொக்கப் பரிசுத் தொகை வழங்கி ஊக்கப் படுத்துகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இதுவரை 120 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு விரைவில் அரசு வேலை இரு நாட்களில் வழங்கப்படும். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இத்தனைப் பேருக்கு வேலை வழங்கியது திமுக அரசுதான். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *