
திருச்சி, பிப்.18– திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா. தஞ்சையில் நடைபெற்ற 7ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் Senior Black Belt Katta பிரிவில் முதலிடமும், Fighting பிரிவில் இரண்டாம் இடம் வென்று கோப்பை யையும், சான்றிதழையும் வென்றார்.
7ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, கரூரில் நடைபெற்ற First International open FIDE Rating சதுரங்கப் போட்டியில் 11 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் மாவட் சிறந்த மாணவியாக தேர்ச்சி செய்யப்பட்டு ரூ.600 ரொக்கப்பரிசை பெற்றார்.
இம்மாணவிகளுக்கு திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து களையும், பாராட்டுதல் களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப் படுத்தினர்.
