திருச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.02.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆற்றுப்படுத்துநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல்/ உளவியல்/ ஆற்றுப்படுத்துதல் துறை போன்றவற்றில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.01.2026 அன்று 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ. 18,536
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2026/02/17706447894013.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், திருவள்ளூர் – 602001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026
