‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ – நூலின் இணையப் பதிப்பை வெளியிட்டார் தமிழர் தலைவர்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிந்துவெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர்  ஆர். பால கிருஷ்ணன் அவர்கள்  ‘‘அகஸ்தியர்: ஒரு மீள்பார்வை’’ என்ற சொற் பொழிவை 7.3.2025 அன்று நிகழ்த் தினார். ‘அகஸ்தியர் தமிழைத் தோற்றுவித்தார்’ என்பது போன்ற பல கட்டுக்கதைகள் திடீரென பெரும் உரையாடல்களாக மாறத்தொடங்கின. அதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு அகஸ்தியர் குறித்த கட்டுக் கதைகளை தரவுகளைக் கொண்டு  கட்டுடைக்கும் நோக்கில் இந்த உரை இருந்தது.

இந்த உரையின் நூல் வடிவத்தை 19.8.2025 அன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நூலை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி இணையத்தில் வழங்கப்படுகிறது.

நேற்று (17.02.2026) மாலை சிந்து வெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர்  சுந்தர் கணேசன் அவர்களும் ஆசிரியர்  கி. வீரமணி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நூலை முதலில் பதிவிறக்கம் செய்து தொடங்கிவைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, ஆசிரியர் அவர்கள் நூலைப் பதிவிறக்கம் செய்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ நூலை https://rmrl.in/ta/irc என்ற இணையப் பக்கத்தில் இருந்து இலவச மாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *