சிந்துவெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர் ஆர். பால கிருஷ்ணன் அவர்கள் ‘‘அகஸ்தியர்: ஒரு மீள்பார்வை’’ என்ற சொற் பொழிவை 7.3.2025 அன்று நிகழ்த் தினார். ‘அகஸ்தியர் தமிழைத் தோற்றுவித்தார்’ என்பது போன்ற பல கட்டுக்கதைகள் திடீரென பெரும் உரையாடல்களாக மாறத்தொடங்கின. அதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு அகஸ்தியர் குறித்த கட்டுக் கதைகளை தரவுகளைக் கொண்டு கட்டுடைக்கும் நோக்கில் இந்த உரை இருந்தது.
இந்த உரையின் நூல் வடிவத்தை 19.8.2025 அன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார்.
‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நூலை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி இணையத்தில் வழங்கப்படுகிறது.
நேற்று (17.02.2026) மாலை சிந்து வெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் அவர்களும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நூலை முதலில் பதிவிறக்கம் செய்து தொடங்கிவைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, ஆசிரியர் அவர்கள் நூலைப் பதிவிறக்கம் செய்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
‘அகஸ்தியர்: ஒரு மீள் பார்வை’ நூலை https://rmrl.in/ta/irc என்ற இணையப் பக்கத்தில் இருந்து இலவச மாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
