கூட்டணி விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.சி.வேணுகோபால் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி குறித்து 2-ஆம் கட்ட தலைவர்கள் (மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி) பேசுவது, அவர்களின் தனிப் பட்ட கருத்து, அது கட்சியின் கருத்து அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சிவராத்திரி விழாவில்
முப்படை அதிகாரிகள் எதற்கு?
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றது நாட்டின் மதச்சார் பின்மைக்கு எதிரானது என சிபிஅய் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். மேலும், முப்படை அதிகாரிகள் சீருடையுடன் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டது கண்டனத்திற்குரியது எனவும் சாடியுள்ளார். ஒன்றிய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
