டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு, மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என தகவல்.
* வெளியில் யாரும் பேசக்கூடாது: கூட்டணி குறித்து தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்; காங்கிரஸ் மேலிடம் வாய்ப் பூட்டு. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் தொடர்கிறது. 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.
* விமான விபத்தில் அஜித் பவார் மரணம், சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் மனைவியும் துணை முதலமைச்சருமான சுனேத்ரா பவார் கோரிக்கை.
* தமிழ்நாட்டின் ஜி.டி.பி., இந்திய சராசரி ஜிடிபியை விட அதிகம்; தமிழ்நாடு பட்ஜெட் குறித்த ஆய்வில் தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் 62 இமெயில், 14 சந்திப்புக்கள்: பாஜக அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கமளிக்க காங். வலியுறுத்தல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்திய பிரதேசம்: ஜல்னா மாவட்டத்தின் தலேகான் கிராமத்தில் தங்கள் குடும்பத்தில் திருமண விருந்துக்கு ஆடுகள் வெட்டப்பட்டதை அடுத்து, “மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக” அய்ந்து முஸ்லிம்கள் மீது மத்தியப் பிரதேச காவல்துறை எப்.ஆர்.ஆர் பதிவு.
தி இந்து:
* கண்காட்சியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு; ஏஅய் தாக்க மாநாட்டில் ஏற்பாடுகள் மோசம்: லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது, பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
* ‘‘இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் ஏஅய் திறன்களை நிரூபிக்கும் ஒரு கண்காட்சி ஏஅய் உச்சிமாநாடு. ஆனால் இந்த விளம்பர பசியுள்ள ஒன்றிய அரசு முழுமையான குழப்பமாகவும் தவறான நிகழ்ச்சி ஏற்பாட்டாகவும் மாற்றி இருக்கிறது என மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.
தி டெலிகிராப்:
* ஜாதி பாகுபாடு கோரிக்கைகள் மீதான போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்த டில்லி பல்கலைக்கழகம் தடை; “ஜனநாயக விரோதமானது” என்றும் “பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்புகள், மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜகவின் உத்தரவின் பேரில் செயல்படும் ‘துக்ளக் கமிஷன்’: தேர்தல் ஆணையத்தின் மீது மம்தா கடும் விமர்சனம். பாஜக அய்டி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி “வங்காளத்தில் லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீக்கியுள்ளார்” என குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
