திண்டிவனம், பிப். 18- 15.2.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டிவனம் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் சுயமரியாதைச்சுடரொளி கா.மு.தாஸ் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.
மாவட்டக் கழகத் தலைவர் இரா.அன்பழகன் தலைமை வகித்தார்.
காப்பாளர் செ.பரந்தாமன் மாவட்ட மகளிரணி தலைவர் தா.விசயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பின் காரண மாக அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் மனித நேயக் கொள்கைகள் உலகமயமாகி யுள்ளதையும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட ஆற்றவேண்டிய கடமைகளையும் நினைவூட்டி கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
பிப்ரவரி 21இல் தஞ்சையில் நடைபெறவுள்ள மாநாட்டில் குடும்பத்தோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன், மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் செயலாக்கவுரை வழங்கினார்கள்.
பொதுக்குழு உறுப்பினர் பா.வில்லவன் கோதை, மாவட்ட துணைச்செயலாளர் பாஞ்சாலம் ஏ.பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.இரமேசு, ஒலக்கூர் ஒன்றியதலைவர் க..பாலசுந்தரம், நகர இளைஞரணி தலைவர் கே.பாபு, செயலாளர் ச.செந்தில்,நகரத்தலைவர் உ.பச்சையப்பன், பகுத்தறிவாளர் கழகத்தலைவர் சாரம் ஆசிரியர் மா.குமார், பாஞ்சாலம் கிளைக் கழகத் தலைவர் நா.இராசாராம், மயிலம் ஒன்றிய மகளிரணி தலை வர் கஸ்தூரி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் இ.நிவேதா,தா.தேன்மொழி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்
பிப்ரவரி 21இல் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள மகளிரணி மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி மாநாட்டிற்கு தனிப் பேருந்து ஏற்பாடு செய்து குடும்பத்தோடு பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மார்ச்-10இல் அன்று தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழாவினை கொள்கை விளக்க கூட்டம் நடத்தி கொண்டாடி மகிழ்வதென முடிவுசெய்யப்பட்டது.
மயிலம், வானூர், ஒலக்கூர், ஒன்றியம், திண்டிவனம் 33 வார்டு களிலும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தெருமுனைக் கூட்டத்திற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் எனது சொந்தபொறுப்பில் ஏற்பாடு செய்து தருகிறேன் என அறிவித்த மாவட்டக் கழக துணைத் தலைவர் தழுதாளி ச.அன்புக்கரசனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டிற்கு தனிப் பேருந்தில் செல்வதற்குரிய பயணப் கட்ட ணத்தை ஒவ்வொருவரும் செலுத் தினார்கள்.
அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
