கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘தஞ்சை மாணவர்-இளைஞர்-மகளிரணி-மகளிர் பாசறை மாநாட்டு’க்கு இரண்டு பேருந்துகளில் பங்கேற்க முடிவு! கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள்! – ‘விடுதலை’ சந்தாக்கள் சேர்த்து அளிப்பது!

வடக்குத்து, பிப். 17– கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.2.2026 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில்கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார்.

இம்மாதம் 21ஆம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக – திராவிடர் கழக இளைஞர் அணி மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநாடு மற்றும் கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவது, விடுதலை சந்தா சேர்க்கை குறித்த பொருள் பற்றி கழகத் தோழர்கள் குறிஞ்சிப்பாடி கனகராசு ,வடலூர் புலவர் ராவணன், வடக்குத்து டிஜிட்டல் ராமநாதன், அப்பியம்பேட்டை வேலு, மேல்பட்டாம்பாக்கம் ரமேஷ், வேல்முருகன், குறிஞ்சிப்பாடி பெரியார் செல்வம், நெய்வேலி பாவேந்தர் விரும்பி ,நூலகர் கண்ணன் ,சாத்திப்பட்டு தமிழன்பன், வடலூர் முருகன், மருவாய் திருநாவுக்கரசு, நடுவீரப்பட்டு சுகுமாறன், ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தலைமையேற்ற முனைவர் துரை சந்திரசேகரன் கழக அமைப்புப் பணிகள், பிரச்சாரப் பணிகள், தஞ்சையில் நடைபெற உள்ள மாணவர் இளைஞர் மகளிர் மாநாடு, விடுதலை சந்தா சேர்க்கை இயக்க வளர்ச்சி பற்றிய தமது கருத்துக்களை தோழர்களுக்கு விளக்கினார். மாநாட்டில் பெருமளவில் தோழர்கள் திரள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்

தஞ்சையில் வரும் பிப். 21-ஆம் நாள் நடைபெற உள்ள கழக மாணவர்- இளைஞர்- மகளிர் மாநாட்டில் இரண்டு பேருந்துகளில் சென்று கலந்து கொள்வது,

இயக்க வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய வரவுகளை இணைத் திடுவது குறித்தும், கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது,

விடுதலை சந்தா முடிந்தவர்கள் புதுப்பிப்பது, புதிய சந்தாதாரர்களை சேர்ப்பது ஆகியன பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது. இறுதியில் வடக்குத்து கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *