ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை வெ.விமல் அவர்களின் மகன் வி.புதியவன், தான் சேர்த்த உண்டியல் தொகை ரூ 2,050அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இயக்க நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தார் (7.2.2026 – தஞ்சாவூர்).

குமரிமாவட்டம் சுசீந்திரம் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ப.வி.அருண் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன்: குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுருதியிடமிருந்து ‘விடுதலை’ ஓராண்டு சந்தாவை வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் பெற்றுக்கொண்டார் (16.2.2026).
