டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றியம்-மாநிலங்கள் இடையேயான உறவில் கூட்டாட்சி சமநிலையை மீட்டெடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை. மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறு சீரமைப்பது அவசியம்; முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வங்க தேசத்தின் பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்பு – ஒன்றிய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மிக முக்கியமான பகுதிகளை முடக்கி உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய மாற்றங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: விசாரணை உயர் அமர்வுக்கு மாற்றம்.
* சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் 9 நீதிபதி அமர்வு ஏப். 7 முதல் விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கேரளாவில் மதச்சார்பின்மை வலுவாக இருந்தாலும், இந்தியாவின் பிற பகுதிகளில் அது ஒரு ‘அச்சுறுத்தலை’ எதிர்கொள்கிறது என நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் எச்சரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் மாநிலத்தில் 85 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும், என ராஷ்டிரிய ஜனதா தளம் பீகார் சட்டமன்றத்தில் கோரிக்கை. மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட வேண்டும் என கருத்து.
* கேரளாவில் தேவிகுளம் தாலுகாவின் மறையூர், காந்தலூர், கீழந்தூர் மற்றும் காரையூர் கிராமங்களில் பரவியுள்ள அஞ்சுநாடு வெள்ளாளர்கள், ஒன்றிய அரசின் ஓபிசி பிரிவில் சேர்த்திட வேண்டுகோள்.
* ஆர்.எஸ்.எஸ் ஒரு தீய சக்தி, பாஜக அதன் நிழல்: “அவர்கள் வன்முறையையும் இரத்தக் களரியையும் தூண்டி இளைஞர்களின் எதிர் காலத்தை அழிக்கிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்து, தொழிலதிபர்களாகவும், துணிகர முதலீட்டாளர் களாகவும் மாறி, பின்னர் பாரதம் பற்றி உலகிற்குப் போதிக்கிறார்கள். காக்கி சட்டைகளில் ருர்மத்தையும் கோமாதாவையும் பாதுகாக்க லத்திகளை ஏந்திய பாஜக தலைவர்களின் குழந்தைகளை ஏன் நாம் பார்க்கவில்லை?”
தி இந்து:
* இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்க தகுதியுள்ள சிறந்த நபர் மு.க.ஸ்டாலின்தான், என காங். மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* ‘கிக்’ பணியாளர்கள் என அழைக்கப்படும் தற்காலிகப் பணியாளர்கள் மீது ஜாதிப் பாகுபாடு உள்ளது. பாஜக அரசு அத்தொழிலாளர்களின் நிலையை புறக்கணிக்கிறது என ராகுல் குற்றச் சாட்டு. காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம் மற்றும் சமத்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உரிமைகள் அடிப்படையிலான சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஆர்எஸ்எஸ் மீது பிரியங்க் கார்கே ‘பண மோசடி’ குற்றச்சாட்டு. ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும் என்று கூறும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும், அவர் மற்றவர்களின் குழந்தைகளை வளர்ப்பது பற்றிப் பேசுகிறார். வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கருநாடகா அமைச்சர் பிரியங் கார்கே கடுமையாக தாக்கினார்,
– குடந்தை கருணா
