நாகர்கோவில், பிப். 17– கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 15.2.2026 அன்று காலை நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் சிறப்புரை யாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, மாவட்ட மகளிர்பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மோ.செ. பரத் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாவட்டதுணைச்செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், பொதுக்குழு மு.இராசேகர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திக தலைவர் எஸ்.குமார தாஸ், தோவாளை ஒன்றிய தலைவர் மா ஆறுமுகம், ஞா.பிரான்சிஸ், கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் வில்லுக்குறி செல்லையா, கழக குமரி நகர செயலாளர் க.யுவான்சு தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், பிரவின் ஆகியோர் பங்கேற்றனர். பிப்ரவரி 21இல் தஞ்சையில் நடைபெறவுள்ள கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசறை மாநாட்டில் குமரி மாவட்ட கழகம் சார்பாக தோழர்கள் குடும்பத்தோடு பெருந்திரளாக எழுச்சிகரமாக சென்று பங்கேற்பது எனவும் குமரி மாவட்ட மாணவர் கழகம் சார்பாக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பரப்புரை நடத்துவது எனவும், சென் னையில் நடைபெற்ற திராவிடர்கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழுமனதாக வரவேற்று குமரிமாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் நன்றி கூறினார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.வி.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கோவி பெரியார் தாசன், மாவட்டத் துணைத் தலைவர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட துணை செயலாளர் பா.முருகன், வலசை காடு தலைவர் வீரமணி.
