கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே…
2026 பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் திராவிடர் இன எழுச்சிப் பேரணியில் 7 அடி உயரம் உள்ள கொடிக்கம்பத்தில் (வெள்ளை பெயிண்ட் அல்லது வெள்ளை பைப்) 3 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட திராவிடர் கழகக் கொடியுடன் வர மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு தோழரின் கைகளிலும் கழகக் கொடிகள் உயரட்டும்!
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
ஒவ்வொரு தோழரின் கைகளிலும் கொடிகள் உயரட்டும்!
Leave a Comment
