மறைவு – விழிக்கொடை – உடற்கொடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின் தாயார் மங்கையர்க்கரசி நேற்று (16.2.2026) காலை 7 மணிக்கு மறைவுற்றார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம், மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், நெல்லை மாவட்ட தலைவர் ச.ராஜேந்திரன்,  போட்டோகிராபர் இரா. ராதா, ப.க. அமைப்பாளர் பா.சடகோபன், சீனிவாசன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து அசோக் அவர்களிடம் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மறைந்த அம்மா அவர்களின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்குவழங்கப்பட்டது. மதுரை வடக்கு மாசி வீதி இல்லத்திலிருந்து வீரவணக்கமுழக்கத்துடன் இறுதி நிகழ்வு தொடங்கி அவருடைய உடல் மதுரை மருத்துவக் கல்லூரிக்குகொடையாக வழங்கப்பட்டது தொடர்புக்கு. பா.அசோக்  94430 63279.

மறைவு

மறைவு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பி.பாண்டியன் நேற்று (16.2.2026) காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். மாவட்ட கழகத்தின் சார்பில் ஆச்சாள்புரம் அவரது இல்லம் சென்று மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ்,  மாவட்டச் செயலாளர் கு.இளமாறன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன்,  சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், செயலாளர் கடவாசல் ச.செல்வம், கடவாசல் பகுத்தறிவாளர்  கழக தோழர் அறிவழகன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய கழக தலைவர் அ.சாமிதுரை மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *