பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின் தாயார் மங்கையர்க்கரசி நேற்று (16.2.2026) காலை 7 மணிக்கு மறைவுற்றார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம், மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், நெல்லை மாவட்ட தலைவர் ச.ராஜேந்திரன், போட்டோகிராபர் இரா. ராதா, ப.க. அமைப்பாளர் பா.சடகோபன், சீனிவாசன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து அசோக் அவர்களிடம் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மறைந்த அம்மா அவர்களின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்குவழங்கப்பட்டது. மதுரை வடக்கு மாசி வீதி இல்லத்திலிருந்து வீரவணக்கமுழக்கத்துடன் இறுதி நிகழ்வு தொடங்கி அவருடைய உடல் மதுரை மருத்துவக் கல்லூரிக்குகொடையாக வழங்கப்பட்டது தொடர்புக்கு. பா.அசோக் 94430 63279.
மறைவு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பி.பாண்டியன் நேற்று (16.2.2026) காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். மாவட்ட கழகத்தின் சார்பில் ஆச்சாள்புரம் அவரது இல்லம் சென்று மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், மாவட்டச் செயலாளர் கு.இளமாறன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், செயலாளர் கடவாசல் ச.செல்வம், கடவாசல் பகுத்தறிவாளர் கழக தோழர் அறிவழகன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய கழக தலைவர் அ.சாமிதுரை மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
