வளர்ச்சிப் பாதையில் தொலைநோக்கோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இடைக்கால நிதிநிலை அறிக்கை!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (17.2.2026) இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதி நிலை அறிக்கை (2026–2027) என்றாலும், ஒரு முழுமையான நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) இடம் பெறுவதுபோன்ேற அரிய திட்டங்களும், அறிவிப்புகளும் மலைப்பை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமலும், மேலும் செழுமைப்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதும் – பாராட்டத்தக்கதும் ஆகும்.

சமூகநலத் திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாடு, உயர் கல்வித்துறை, கல்வி மற்றும் இளைஞர் நலன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பண்பாடு மற்றும் அகழாய்வுத் திட்டங்கள் தமிழ் மொழி வளர்ச்சி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலன், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டம், அரசுப் பணியாளர்களை மகிழ்விக்கும் ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு, இலங்கைத் தமிழர் நலன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் – இடைக்கால பட்ஜெட்டில் இவ்வளவு நல்வாழ்வுத் திட்டங்கள் என்பது கேள்விப்பட்டிராத ஒன்று!

2026–2027ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப் பற்றாக்குறையின் விகிதம் மூன்று விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2027–2028 மற்றும் 2028–2029 ஆம் ஆண்டுகளில், இது முறையே 2.89 விழுக்காடு மற்றும் 2.80 விழுக்காடாக குறையும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது இந்தஇடைக்்கால நிதி நிலை அறிவிக்கையின் தொலைநோக்குப் பார்வையைத் துல்லியமாகக் காட்டுகிறது.

இது முதலமைச்சர் அவர்களது ஆட்சி மகுடத்தில் பதிக்கப்பட்ட அரியதோர் ஆணி முத்து!

ஒன்றிய பிஜேபி அரசு வேளாண் துறையை வீழ்ச்சிப் பாதைக்கு இழுத்துச் செல்லும் நிலையில், ‘திராவிட மாடல்’ அரசு தாக்கல் செய்துள்ள வேளாண்மை இடைக்கால நிதி நிலை அறிக்கையில், நம்பிக்கையூட்டும்  பல்வேறு சிறப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.47,248.24 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது சிறப்பானதும், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்.

முதலமைச்சர் நிதியமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர்களுக்கு நமது பாராட்டுகள்!

 

கி.வீரமணி
தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

17.2.2026     

குறிப்பு: இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றி விரிவான அறிக்கை நாளை வெளிவரும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *