ஓடும் ரயிலில் தீனதயாள் உபாத்யாயாவுக்கு பூஜையாம்! ரயிலில் பயணிகளை வற்புறுத்தி வணங்கச் சொன்ன பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர்கள்! கேரளாவில் வெடித்த சர்ச்சை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.16 திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர்கள், கொச்சி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி யில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க.வைத் தோற்றுவித்த தீனதயாள் உபாத்யாவின் நினைவைக் கடைப்பிடிக்கும் விதமாக, ரயிலில் தீனதயாள் உபாத்யாயா படத்திற்கு மாலை அணிவித்து, ‘பால் அபிசேகம்’ மற்றும் பூஜை பஜனை செய்தது மட்டுமல்லாமல், ரயில் பயணிகளை வற்புறுத்தி, ‘‘வந்து வணங்கிவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கூறி, பிரசாதமும் தந்தனர்.

 தண்டனைக்குரிய குற்றம்!

ரயில் பயணம் அமைதியாகவும், ஓய்வெ டுத்துச் செல்வதற்காகவும் குளிர்சாதனப் பெட்டியைத் தேர்தெடுக்கின்றனர். அங்கும் சிறிதளவும் சமூகப் பொறுப்பின்றி இவ்வாறு செய்ததை சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர். பொதுவாக இவ்வாறு செய்வது ரயில்வே விதிகளின்படி அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தனது வேலையைக் காட்டத் துவங்கி விட்டனர்!

ஆனால், பா.ஜ.க.வினரின் ரயில் ஆயிற்றே; இதுவரை வட இந்தியாவில் தான் இதுபோன்ற அவலங்கள் இருந்தன. இப்போது கேரளாவிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியதும் தனது வேலையைக் காட்டத் துவங்கி விட்ட
னர்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *