தஞ்சாவூர், ஏப்.16- தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் ஏற்கெனவே இருந்த ரேஷன் கடை பழுதடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ரேஷன் கடையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் ஒதுக் கினார். இதனைத் தொடர்ந்து சீரமைப்பு செய்து புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கி முடிந்தது.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம் தலைமை தாங்கி புதிய ரேஷன் கடையை திறந்து வைத் தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராம நாதன், தி.மு.க. மாநில மருத்துவ ரணி துணை செயலாளரும், துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி, காவிரி சிறப் பங்காடி தலைவர் பண்டரிநாதன், பகுதி செயலாளர்கள் சதாசிவம், நீலகண்டன், மண்டலகுழு தலை வர் கலை , வார்டு உறுப்பினர்கள் ஆனந்த், அண்ணா. பிரகாஷ், உஷா, சுகந்தா, ஜே.ஆர்.கே. பள்ளி தர்மராஜ், 51ஆவது வார்டு நிர் வாகிகள் ராஜ்குமார், நாதன், பிரேம், செழியன், அஜய் , உதேக், பரமேஸ்வரன் , காரல் பாலாஜி, விஜி, பார்த்திபன், வீரராசு, நாக ராஜன், சுமன், மோகன்ராஜ், விக்கி கேசவன், கோவி. சண்முகம், பால கிருஷ்ணன், திருநாவுக்கரசு, டைட் டஸ், இளமுருகன், சத்தியமூர்த்தி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.