டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வாக்காளர் சிறப்புத் திருத்த இறுதி பட்டியல் நவம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்படும், தேர்தல் ஆணையம் தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மார்ச் 9-ஆம் தேதி விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும், ஒன்றிய அமைச்சர் ரிஜ்ஜூ பேட்டி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆளும் உத்தரகாண்டில் பஜ்ரங் தளம் போன்ற வலதுசாரி அமைப்புகளால் செய்யப்படும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை காங்கிரஸ் கண்டனம். மேலும் அனுமன் என்ற பெயரில் நடத்தப்படும் “போக்கிரித்தனத்தை” இனி பொறுத்துக் கொள்ளாது என்று அறிவித்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகளின் திருமணம் கருணை அடிப்படையில் நியமனம் செய்வதில் தடையாக இருக்காது: ஒடிசா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. “இறந்த ஊழியரின் மகன்கள் கருணை அடிப்படையில் நியமனம் பெறுவதற்கு திருமணம் ஒரு தடை இல்லை என்றால், அது மகள்களுக்கும் பொருந்தும்” என்று நீதிபதிகள் கிருஷ்ணா சிறீபாத் தீட்சித் மற்றும் சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இறந்த மஜ்தூரின் மகள் தாக்கல் செய்த மனுவை அனுமதித்து உத்தரவு
தி இந்து:
* நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு: மாதத்திற்கு ரூ.1,500 வேலையின்மை உதவித்தொகை வழங்கும் வங்காள யுவ சதி திட்டத்திற்கான பதிவு படிவங்களை நிரப்ப மேற்கு வங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நின்றனர்.
தி டெலிகிராப்:
* நாடு தழுவிய பட்டியல்கள் காலாவதியான நிலையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியச் சுமையை மாநிலங்களுக்கு மாற்றுகிறது மோடி அரசு: தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்துவது மற்றும் பயனாளிகளின் பட்டியலை புதுப்பிப்பது போன்ற பொறுப்பை ஒன்றிய அரசு மாநிலங்களின் தலையில் கட்டியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பஞ்சர் ஆன டயர்கள் மற்றும் செயல்படாத ‘டப்பா’ எஞ்சின் கொண்ட வாகனம் என்.டி.ஏ. அது தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது,” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.
– குடந்தை கருணா
