செங்கை, ஏப். 16- எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம் 13.4.2023 அன்று மாலை 5.00 மணிக்கு மறைமலை நகர் திருவள்ளுவர் மன்றத்தில் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் பொறியாளர் இரா.செந்தூர பாண்டியன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச .பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரை ஆற்றி னார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் உழைப் பால் விளைந்தபயன்களை எடுத் துக் கூறி பகுத்தறிவு வாழ்வே பண் பட்ட வாழ்வு என்ற அடிப்படை கோட்பாட்டுடன் மாணவர்கள் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட திரா விடர் கழக தலைவர் செங்கை. பூ.சுந்தரம், மாவட்ட செயலாளர் அ.செம்பியன், மண்டல மாணவர் கழக செயலாளர் ம.சுபாஷ், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் சே.சகாயராஜ், மா.சமத்துவமணி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அமைப்பாளர் பொன் .ராஜேந் திரன், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், தொழிலாளர் அணி, இளைஞரணி பொறுப் பாளர்கள் சி. தீனதயாளன், கோ. ராதாகிருஷ்ணன் மு.பிச்சை முத்து, கூடுவாஞ்சேரி மா.ராசு. சிவகுமார், மா. நரசிம்மன், திருக்குறள் வெங்க டேசன், மு அருண்குமார், ரயில் நகர் பெருமாள், வினோத் குமார், நெடுவை கு.வைத்தியலிங்கம், பி.ஆகாஷ், இனியவன், சங்கமித்ரா, க.இலக்கியச் செல்வி, க.தாமரைச் செல்வி உள்ளிட்ட மாணவச் செல்வங்களும் பங்கேற்று சிறப் பித்தார்கள். பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதை சுட ரொளி செங்கற் பட்டு கோவிந்த சாமி மறைவிற்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. கோவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் திரளான மாணவர்களுடன் பங்கேற்று சிறப் பிப்பது எனவும், வைக்கம் நூற் றாண்டு விழாவை சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் கொண்டாடி மகிழ்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. எஸ்.ஆர். எம். சட்டக் கல்லூரி திராவிட மாண வர் கழக புதிய பொறுப்பாளர்கள்: தலைவர் – இதயா, செயலாளர் – இன் பத் தமிழன், அமைப்பாளர் – டெலிசா.