எர்ணாகுளம், பிப். 16- கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் “சார்வாகா 2026” என்ற தலைப்பில் பகுத்தறிவு, அறிவியல் தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் 2026 பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். யுக்திவாத பாடனகேந்திரம் என்ற அமைப்பு, அதன் 14-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் எர்ணாகுளம் டவுன் ஹால் – ஈ.எம்.எஸ் அரங்கில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.
மலையாள முற்போக்கு எழுத்தாளர் எம்.என்.காரசேரி இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அறிவியல் விரிவுரையாளர் பாப்புட்டி – ராகுகாலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சமகால சமூகமும், பெண்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மருத் துவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
நேபாள் நாட்டில் நடந்த இளையோர் புரட்சி தொடர்பாக அந்நாட்டு மனிதநேய சங்கப் பொறுப்பாளர் ரகு கே.கனாம் உரையாற்றினார். ஓமியோபதி குறித்து பேராசிரியர் சிறீகுமார் உரையாற்றினார்.
மதிய உணவுக்குப் பின்னான அமர்வில், “மதமற்ற அரசியலை உருவாக்குதல்” குறித்த கருத்துரையாடல் முதல் நிகழ்வாக நடைபெற்றது. அமர்வை, நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கேரள வழக்குரைஞர் கோபகுமார் நெறியாள்கை செய்தார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தெலங்கானா நாத்திகர் சங்கத்தின் பொறுப்பாளர் ஜோஷி பிரசாந்த், எழுத்தாளர் பீர் முகம்மது, யுக்திவாத பாடனகேந்திரத்தின் ஷிபு எரிக்கல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
வந்தே மாதரம் தேசியப் பாடலலாக ஏற்கப்படாதது ஏன்?
நாட்டில் தற்போதைய பெரும் பிரச்சினையாகத் திகழும் மதவெறி, மதவாத அரசியல் போக்குகளையும், அதன் தற்போதைய வெளிப்பாடான வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்குதல் உள்ளிட்டவற்றையும் குறித்து உரையாடல் தொடங்கியது. 1937 முதலே நடந்துவரும் விவாதங்களில், வந்தே மாதரம் பாடல் தேசியப் பாடலாக ஏற்கப்படாதது ஏன் என்பது குறித்தும், மதவெறியூட்டும் பாடலாக வந்தே மாதரமும், ஆனந்த மடம் நாவலும் இருப்பதையும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எடுத்துக்காட்டினார். 2014க்குப் பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள், இடையூறுகள், தமிழ்நாட்டின் எதிர்வினைகள் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, தந்தை பெரியார் காலத்திலிருந்து திராவிடர் கழகம் ஆற்றிவந்த பிரச்சாரம் காரணமாகத் தமிழ்நாட்டில் பாபர் மசூதி இடிப்பு காலத்தில் கூட மதக் கலவரங்கள் நடக்காததையும், திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சினைகளைத் திட்டமிட்டுக் கிளப்பும் சங் பரிவாரின் சதிகள் தொடர்ந்து தோற்று வருவதையும், தமிழ்நாட்டு மக்கள் 2014 முதல் மூன்று தேர்தலாக ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட பா.ஜ.க.வுக்கு வழங்காததையும் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்புச்
சட்டத்திற்கு ஆபத்து
சட்டத்திற்கு ஆபத்து
இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், இறையாண்மை ஆகியவற்றுக்குப் பெரும் ஆபத்து வந்திருப்பதையும், அதைக் களைய பரப்புரைகளும், கல்வி நிறுவனங்களில் பாடங்களும், வகுப்புகளும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சிகளும் அவசியம் என்பதையும், அதில் அரசு மற்றும் பகுத்தறிவாளர் அமைப்புகளின் கடமைகளையும் சுட்டிக்காட்டினார். கலந்துரையாடலில் பங்கேற்ற மற்றவர்களும் பல்வேறு செய்திகளை முன்வைத்தனர். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பதில் அளித்தார்.
பார்வையாளர் கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாட்டில் நடைபெறும் பகுத் தறிவாளர் மாநாடுகளில் பங்கேற்பதையும், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர் களின் உரைகளைக் கேட்டு, கழகத்துடன் தொடர்பில் இருப்பதையும் 89 வயது டாக்டர் தொடுப்புழா பத்மநாப் நினைவு கூர்ந்து வாழ்த்துத் தெரிவித்தார்.
‘பேய்’களின் வருகை குறித்து ஆய்வுரை
கருத்தரங்கின் இரண்டாம் நாளான நேற்று, இந்தியாவை உடைக்கும் ஸநாத னம், இந்துத்துவ மயமாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகளும் இளை ஞர்கள் அரங்கமும், மலையாள சினி மாத் துறையில் ‘பேய்’களின் வருகை குறித்த இயக்குநர் சஜீவன் அந்திக் காடு அவர் களின் உரை உள்ளிட்ட நிகழ்வு களும் நடக்கவுள்ளன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பின் தலைவர் ஏ.சி.ஜார்ஜ், செயலாளர் சாந்தி சிவன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.கோபகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
