சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 9.2.2026 அன்று உயிரிழந்தார் சென்னை வண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (62). இவர், தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இந்த நிலையில், ராஜா சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் 38 பேருடன் குழுவாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்தார். இந்தக் குழுவினர், தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி மலைக்கு புறப்பட்டனர். அப்போது, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இரட்டை லிங்கம் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜா உயிரிழந்தார். அவரது உடலை அடிவாரத்துக்குக் கொண்டு வந்த அதிகாரிகள், கூராய்வுக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாப்டூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
